இன்றும் ஒரு பொய்

கதறிக் கொண்டே
உருண்டோடிக் களைத்து
வீழ்ந்திருந்தது
கொடுமழை
கிழித்து விட்டிருந்த நதி.....

இரு தண்ணீர்ப் பட்சிகளின்
சல்லாபமென எழுதி
நானும்
ஒரு பட்சியின் வலி
மறைத்திருந்தேன்....

ஒருகொத்துச் சுழல்காற்று
பிய்த்துப்போட்டிருந்த
பூவிதழுக்கும் அப்படியேதான்
சொல்லியிருந்தது
உதிர்தல்தானே
பூக்களுக்கு அழகென
ரணங்கள் புதைத்துவிட்டிருந்த
என் எழுத்து.....

வலி...... ரணங்கள்
பெயர்த்தெறிந்து அரிதாரங்கள்
மின்னியிருந்த
முகப்பூச்சுகளை...
மாற்றுச் சிந்தனையென சிலாகித்து
காதல் மொழிய
வந்திருந்தாய்.... நீ...!!

அரிதாரச் செதில்
கொஞ்சமாய் கழற்றியிருந்த
நானும்....காதலின்
நீட்சி வேண்டுமென
வன்புணர்ந்திருந்த... அடுத்த
நாழிகையில்...

களைத்த நதியோரம்
என்னால் ஒட்டியிருந்த
இச்சை அழுக்குகள்
கழுவிக் கொண்டிருந்தாய்...

நானும் மறுகரையோரம்
நின்று
மரத்துக்கும் மலைப்பாறைக்கும்
எழுத யோசித்து
கலைந்துபோயிருந்த
அரிதாரங்கள்
பூசத் தொடங்கியிருந்தேன்.....

எழுதியவர் : நல்லை.சரவணா (20-Dec-14, 3:33 pm)
பார்வை : 128

மேலே