மீண்டும் பிறந்து காத்திருப்பேன் உனக்காக 555
என்னழகே...
கல்லூரி முதல் நாளில்
ஒருமுறை பார்த்தேன்...
உன்னை நான்
எதார்த்தமாக...
அன்று முதல் தவறாமல்
பார்க்கிறேன் உன்னை மட்டும்...
சொல்ல நினைத்த காதல்
உன்னிடம் அழகாக நான் சொல்ல...
நீ எளிதாக சொல்லிவிட்டாய்
பிடிக்கவில்லை என்று...
பிடித்துவிட்டது எனக்கு
உன் நினைவிலே பித்து...
உனக்கு பிடிக்காத என்
காதல் இறந்துவிட்டது...
உனக்கு பிடிக்காத நானும்
இறந்துவிட நினைக்கிறேனடி...
உனக்கு பிடித்தவனாக அப்போதாவது
நான் பிறக்கிறேன்...
ஏற்றுகொள்வாயா அப்போதாவது
என்னையும் என் காதலையும்...
மீண்டும் பிறந்து
காத்திருப்பேன் உனக்காக.....