அவுக அழகா இருக்காக ம்ம்ம்ம்
அவுக அழகா இருக்காக ம்ம்ம்ம் :/
==============================
மாமா அவுக யாரு
கூட வேலை பாக்குற பொண்ணுடா
ரொம்ப அழகா இருக்காக ,,
அய்யே அவுங்கள நல்லா பாரு
கொஞ்சம் கருப்புதாண்டா,,
உன்னை போல நிறமா இல்ல
நீ சூப்பர் ம்ம்ம்ம் :) :)
ம்ம்ம்கும்ம்,, போடா வெங்காயம் :/
உன்னை சுத்தி எல்லாமே அழகா இருக்கு
என்னைத் தவிர என்கிறாள் ,,
அடப்பைத்தியம்
என் எண்ணத்தை ச்சுற்றி
ஆயிரம் நிறங்கள்
அத்தனையிலும்,, நீதானே டா
என்றுவிட்டு
எங்கே மாமாவுக்கு இன்னொரு முத்தம் தாயேன்
என கேட்கும் போது
என் அடையா அகப்பேழைக்குள்
மீண்டுமான அவளின் இன்னொரு நிறம்
உருவாகிறது
மீண்டும் அவளே எல்லோரையும்விட
அழகாகிறாள் ,, அதற்குள் ,,, ம்ம்ம்
அனுசரன்