முழுமையான விடியல்

அம்மாவின் திட்டலுடன் விடியும் விடியல்
காரிருள் நீங்கும் முன்பே
இன்று என்னுள் தொடங்கி விட்டது!

தூக்கம் கலைந்த உணர்வோடு
அடைத்து வைத்திருந்த கதவுகளை திறந்து விட்டேன்....
அதுவரை பூட்டி வைத்திருந்த மனதையும் தான்!

அந்த இருளிலும் பிரகாசமாய் எதிர்பட்ட அவன் முகம்!
எதிர்பாராத விழி மோதல்கள்!
அவன் என் வாழ்க்கையென சொல்லாமல் சொல்லியது!

எதிர்பாராமல் ஒரே இடத்தில் துவங்கியது
இருவருக்குமான கனவு வாழ்க்கை!!

இருவேறு இலட்சியபாதைகளுக்கு இடையில் துவங்கியது
நட்பென்னும் புதிய பாதை...
இருவரும் சேர்ந்து பயணிக்கும்படி!!

அவ்வப்போது பேசிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள்
மெல்ல மெல்ல நிமிடங்களுக்கு நிமிடம் என்றாகி போனது!!

பேசப்பேச புரிந்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமானது..
அவன் மீதான மதிப்புடன்!

நட்பின் எல்லையை ஒருமுறை கூட தாண்டியது இல்லை.
தாண்ட முற்பட்டதும் இல்லை!!
அவனின்றி வாழ்க்கையில் எதுவுமில்லையென
உணர வைத்து விட்டான்!!

காதல் என்பதையும் தாண்டி ,
உணர்வுகளில் வாழும் வாழ்க்கையை பரிசளித்திருக்கிறான்!
ஆயுளுமான அன்பினை அதில் வைத்து!!

அவரவர் பாதையில் இன்று பயணித்து கொண்டிருந்தாலும்,
அன்புடன் பரிசளிக்கும் அவன் முதல் குறுஞ்செய்தி
என் விடியலின் விருந்து!!

காத்திருக்கிறேன்...
அவன் நிஜங்களோடு துவங்க போகும்
முழுமையான ஓர் விடியலுக்காய்!!

எழுதியவர் : மலர் (21-Dec-14, 10:49 am)
பார்வை : 72

மேலே