அவள் என்னவளிலை

உன் வீட்டு நாயை
நேசிக்குமளவுக்காவது நீ
என்னை நேசிப்பதில்லையா ?
கேட்டேன் அவளிடம்
காதருகில் வந்து மெல்ல
சொன்னாள் நான் உன்னவள்
என்று ....

மாலையில் வீடு வருகையில்
அவள் நாய்க்கு முத்தமிடுவதை
கண்டேன் அருகே சென்று
ஆசையாய் முத்தமொன்று
கேட்டேன் தலை குனிந்து
வீட்டுக்குள் ஓடி விட்டாள்
நாயை பார்த்து முறைத்தேன்
அது கணக்கும் இன்றி அவள்
போன வழி நோக்கி சென்றது

இரவில் தூங்கச் செல்கிறேன்
அவள் நாயை அணைத்துக்
கொண்டு படுப்பதைக் கண்டேன்
விரக்தி கொண்டு திரும்பி
வருகையில் அந்த நாய் 'வள'
என்றது திரும்பிப் பார்த்தேன்
அது கிண்டலடிப்பது போல்
தோன்றியது

காலையில் எழுந்து வருகையில்
அவள் நாய்க்கு தலை தடவி
உணவூட்டுகிறாள் நான் அவள்
அருகே உட்கார்ந்தேன்
அவள் தேநீர் கோப்பை தந்து
விட்டு தலை குனிந்து நின்றாள்
அந்த நாயை பார்த்தேன்
அது சிரிப்பது போல் தோன்றியது

திருமணம் முடித்து முதல்
நாளே கண்டு கொண்டேன்
அவள் என்னவளில்லை
அவள் நாயின் அவள் என்று ...

எழுதியவர் : fasrina (22-Dec-14, 8:59 am)
பார்வை : 78

மேலே