சிந்தனையில் காதல்
அவள் -
ஓவியம் வரைந்தேன்
காதல் மலர்ந்தது..
கண்களைக் கண்டேன்
கவிதையும் வந்தது...
அவள் -
நடையைக் கண்டேன்..
தடாகம் குளிர்ந்தது..
கொலுசுகள் சொல்லும்
ரகசியம் புரிந்தது..
அவள்
பாதம் தழுவியப்
பூக்கள் சிரித்தது...
பஞ்சாய் புல்லும்
மெத்தை விரித்தது..
அவள்
சேலைக் காற்றில்
தூது விட்டது
எதுவும் புரியா..
என்மனம் கெட்டது..
அவள் -
முகம் பார்த்து
மௌனம் பேசுது..
அலைகள் போலவே
ஆசைகள் துள்ளுது..
சிந்திப்போம்..!!
இதில் -
ஓவியம் வரைந்தவன்
காதலில் நின்றான் - அதில்
ஒழுக்கம் கெட்டவன்
வீதியில் நின்றான்..
இதில் -
பாதியில் சென்றவன்
பைத்தியம் ஆனான்
மீதியை உணர்ந்தவன்
வைத்தியன் ஆனான்..
இதில் -
உணர முடியாதவன்
உயிரை விட்டான் ..
காதல் மலர்ந்தது - அவன்
கல்லறை போன பின் ..
உன் -
மலர்போன்ற வாழ்க்கை
மடிவதற்கு அல்ல..
மணம்வீசி பிறரை
மகிழ்ச்சி படுத்துவதற்கு ..
உன் -
வாழ்க்கை தோட்டத்தில்
மலர்களுக்கு பதிலாக
மரணத்தை விதைப்பதில்
என்ன பயன் ?... சிந்திப்போம் ..!!