உன்னால் ஁஁஖முடியும்

விழித்தெழு விழித்தெழு விழித்தெழு நண்பா
உறக்கத்தை துறந்து நீ உயிர்த்தெழுடா
மனதினில் மனதினில் மனதினில் உள்ள
கவலைகள் எல்லாம் துடைத்தெறிடா
மாற்றங்கள் மாற்றங்கள் மாற்றங்கள் காண
மாற்றமே நீ என மாறிடுடா
ஏக்கங்கள் ஏக்கங்கள் இனி உனக்கெதுக்கு
உலகத்தின் விடியலே நீ தானடா
காணல் நீர் கூட வறண்டு கிடக்கு
மரங்களை நட்டே நீ மழை பெறுடா
தோல்விகள் தோல்விகள் இனி உனக்கில்லை
முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் பிள்ளை
கல்விகள் கற்கா குழந்தைகள் இல்லை
ஏழைகள் என்ற சொல் இனி இங்கே இல்லை
கடமையை செய்ய பலன் தேவை இல்லை
காணும் உலகம் தூரத்தில் இல்லை

எழுதியவர் : (22-Dec-14, 10:42 am)
சேர்த்தது : கலியுக கோமாளி
பார்வை : 370

மேலே