மனமே நில்லு

பள்ளி செல்லும் வயதில் காதல் எதற்கு
படித்து முன்னேறு வாழ்க்கை உனக்கு
சாலையில் குப்பைகள் சிதறி கிடக்கு
குப்பை தொட்டிகள் இருக்கு அதற்கு
மாது மறந்தால் மதுதான் எதற்கு
வரும் மனைவியை நேசி வாழ்க்கை உனக்கு
தாயில்லாமல் சேயும் இருக்கு
சேயால் பிரிந்த தாயும் இருக்கு
அன்னை இல்லம் பேரு அதற்கு
உன்னால் முடிந்தால் உதவு அதற்கு
பசியால் வாடும் வயிரும் இருக்கு
பசியை தேடும் வயிரும் இருக்கு
குடிசை இல்லாத குடும்பங்கள் இருக்கு
பகட்டுக்கான பங்களா இருக்கு
ஏற்றத்தாழ்வுகள் இனியும் எதற்கு
மாற்றம் தேவை நண்பா நமக்கு

எழுதியவர் : (22-Dec-14, 12:41 pm)
Tanglish : maname nillu
பார்வை : 89

மேலே