நிலவே !

நிலவே ! நீ என்று விதவை ஆனாய்        
வெள்ளை ஆடை ஆணிந்திருக்கிறாய் .

காலையில் மனிதர்கள் உன்னைப் பார்த்தால்     
காரியம் நடக்காது என்பதால் தான் இரவில் மட்டும் தோன்றுகிறாயா?

சகுனம்  பார்ப்பதில் உன்னையும்           
விட்டுவிட  வில்லையா  எம்  மக்கள் .

விதவையாக இருக்கும் அனைவரும்            உன்னைப்போல் இருட்டில் தான் இருக்க வேண்டுமா ?
அவர்கள் வாழ்வில் என்று வெளிச்சம் வரும்?

எழுதியவர் : srihemalathaa.n (12-Apr-11, 4:10 pm)
சேர்த்தது : srihemalathaa.n
பார்வை : 327

மேலே