நிதர்சனம்

தெளிந்த நீர் & தெளியும் மனம்

நீர் -
ஆயிரம் கல்லைக் கொண்டு எறிந்தாலும்
ஆழத்திலிருந்து மேலே வருவேன், நான் -
அடித்தவர் தாகம் தீர்க்க..

நிலை -
நிரம்பி வழிவதும் நிமிர்ந்து நிற்பதும்
குறையினிலிருந்து தெளிவுகள் கண்ட, உன் -
அனுபவம் அன்றோ..

மனம் -
பாழாய்ப் போவதும் பதமாய் ஆவதும்
பண்பட்டவன் கையில் உள்ள பேனா போல...
தீர்ப்புகளைத் தேடாதே, அது உன்கையில் ...!!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜே (22-Dec-14, 4:57 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
Tanglish : nidarsanam
பார்வை : 126

மேலே