உன் பிடியில் என் விடியல்

இதயத்தின் பாரம் தாங்காமல்
உன் கண்ணில் நீர் கசியும் வேளையில்
துயரத்தில் சாயும் தலையை
என்றும் தாங்கி பிடிக்கும் என் தோள்கள்..

பசியால் பிள்ளையின் அழு குரல் கேட்டத்தாய்
ஓடி வந்து பாலூட்டுவதை போல்
என் கரங்களால் உன்னை சுற்றி
துன்பத்தை தூக்கி எறிந்து
இதயத்தோடு இணைப்பேன் இதமாக..

துவண்டு வந்த கண்ணீர் தரை சேரும் முன்
வாடி இருக்கும் முகத்தை
விழாக்கோலம் பூண்ட வீதியாய் மாற்றுவேன்
உன் புன்னகை என்ற வானவேடிக்கை கொண்டு..

என் இரு கைகளில் இருபது விரல்கள் காண
வாழ்க்கை முடிந்து மயானம் சென்றாலும்
கல்லறையில் கண்கள் மூடி காத்திருப்பேன்

உன் வருகைக்காக ..

எழுதியவர் : வசந்த்குமார் (24-Dec-14, 11:29 pm)
பார்வை : 143

மேலே