வசந்த்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வசந்த்குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 21-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 10 |
நாட்டின் மேல் நாட்டம் கொண்டு வாழ்க்கை சற்றே ஆட்டம் கண்டு, இருப்பினும் என்ன அனைத்திற்கும் மாற்றம் உண்டு என வாழும் தொற்றமிழன்.
ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....
விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....
அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....
வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய
நியூட்டன் சொல்ல மறந்த ,
நான்காம் விதியோ ..
நியூட்ரினோ துளைக்க இயலா ,
அற்புத சிலையோ ..
டாவின்சி மெதுவாய் தீட்டிய ,
மோனலிசா ஓவியமோ ..
அப்ச்கிரா பயத்தில் பிகாசோ ,
எரித்த ஓவியமோ ..
சலீம்அலி கண்ணில் படா ,
அரிய பறவையோ ..
கலாம் கைகள் கண்ட ,
அணுஆயுத நிகழ்வையோ ..
அரிஸ்டாட்டில் சிந்தைக்கு எட்டா ,
தத்துவ கிடங்கோ ..
ராமானுஜன் விரல்கள் சொல்லா ,
கணிதக் குறிப்போ ..
டி.என்.ஏ கடத்த இயலா ,
மரபு செய்தியோ ..
ராவணன் கடத்தி அடைத்த ,
சீதையின் தமக்கையோ ..
(யாரிவள் - தேடல் தொடரும் )
நடுத்தர வீடு.. பாட்டு பாடி கொண்டிருக்கும் மகன்..
அம்மா: ஐயையோ.. நம்ம புள்ள வேலை கெடைக்காததால வேலை இல்ல நு சொல்லிட்டே சாகறான் போலருக்குங்க..!!
அப்பா: அட..!! ச்சி..!! அவன் VIP பாட்ட அனிருத் ஸ்டைல்ல பாடுறான்டி..!!
அடுக்கடுக்காய் வீடுகள் கொண்ட
மலையடிவாரக் கிராமத்தின்
ஒடுக்கப்பட்ட கிணற்றினடியில்
பதுங்கி இருந்தான் , அவன்
தூரத்து மலை இருட்டில்
கரிய நிறம் மறந்த காக்கைகள்
செங்குருதி மண்ணில்
புழுதி கொத்திக் கொண்டிருந்தன
வரிசையில் , கடைசியாய்
நின்று கொண்ட , அவனுக்கு
ஈக்கள் மொய்த்த
கொட்டாங்குச்சியும் மறுக்கப்பட்டது
வவ்வால்கள் வட்டமடித்த
சிதிலமடைந்த கோயில் வாசலில்
விளையாடிக் கொண்டிருந்தது
செருப்பணியாத அந்தக் குழந்தை
பிணங்கள் மறுக்கப்பட்ட
தெருவொன்றில் - செங்குத்தாக
நின்றிருந்த அந்தத் தேரில்
கண்மூடிச் சரிந்திருந்தான் அவன்
கற்குகைக்குள் ஒடுங்கிக்கொண்ட ,
முண்டாசு கட்டிய அவன்
நெற்றியில் கரத்தை வைத்து
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
பட்டம் வாங்கிய பிள்ளையை காட்டிலும்
கருமேகம் வட்டமிடுவதை கண்டு
கண்கலங்கும் அவன்!
கைபேசியை காதலித்து கணினியை மணமுடித்து
பணம் தான் அண்டம் என வாழும்
தண்டன்களுக்கு மத்தியில்
வட்டி வாங்கி கடன் தாங்கி
பிறர்க்கு உணவளிக்கவே பிறந்தவன் அவன்!
ஆடம்பரத்தை அம்பலபடுத்த
தொலைகாட்சி முன் அமர்ந்து
பீட்சாவும் பர்கரையும் உண்ணும் இப்பாரில்
கூழையும் கஞ்சையும் உண்டு ஆடம்பரத்தை
தொலைவில் ஒரு காட்சியாக மட்டும் வைத்து
வாழும் அவன்!
பனாரஸ் பட்டையும் ஆலென் சாலியையும் அணிந்து
கண்ணாடியின் முன் காலம் கழிக்கும் மாந்தரின்கண்
விழியில் நீர்
எழுத்தோடு இணைந்த பின் 'அழகு' என்ற சொல்லை பல முறை கேட்க முற்பட்டேன். அதை ஒத்து ஒரு படைப்பு, என் கனவு காதலியை எண்ணி..!!
விழி அழகு மொழி அழகு
விதி யாதென அறியாமல்
உன்னை தேடி வரும் என்
வழியும் அழகு
சொல்லழகு முத்துப்பல் அழகு
நடக்கயில் பீதாம்பரமாய்
பூமியை தினம் படரும்
பட்டுப் பாதம் அழகு
பேச்சழகு மூச்சழகு உன்
இல்லத்தாழ் திறக்கின் முகிலையும்
மேகத்தினுள் மறைக்கும்
முத்து முகம் அழகு
கண்ணில் அந்த புருவம் அழகு
உன்னில் தோன்றின் கருவம் அழகு
அறுவை சிகிச்சையின்றி என் இதயத்தை பறித்த
அந்த பருவமும் அழகு
உடை அழகு நடை அழகு
ஆலயமணியின் இசைக்கேற்ப
அசைந்தாடும் உன்
மெல்லிட
கிழிந்த காகிதமாய்
காற்றில் பறந்த என்னை
கற்பனைக்கு எட்டாத
காவியமாய் மாற்றினாய்..
உன் இதயம் என்ற ஏட்டில்
முதல் பக்கமாக என்னை தாங்கி...!!!!