யாரிவள் - 1

நியூட்டன் சொல்ல மறந்த ,
நான்காம் விதியோ ..
நியூட்ரினோ துளைக்க இயலா ,
அற்புத சிலையோ ..

டாவின்சி மெதுவாய் தீட்டிய ,
மோனலிசா ஓவியமோ ..
அப்ச்கிரா பயத்தில் பிகாசோ ,
எரித்த ஓவியமோ ..

சலீம்அலி கண்ணில் படா ,
அரிய பறவையோ ..
கலாம் கைகள் கண்ட ,
அணுஆயுத நிகழ்வையோ ..

அரிஸ்டாட்டில் சிந்தைக்கு எட்டா ,
தத்துவ கிடங்கோ ..
ராமானுஜன் விரல்கள் சொல்லா ,
கணிதக் குறிப்போ ..

டி.என்.ஏ கடத்த இயலா ,
மரபு செய்தியோ ..
ராவணன் கடத்தி அடைத்த ,
சீதையின் தமக்கையோ ..

(யாரிவள் - தேடல் தொடரும் )

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (20-Jan-15, 2:32 pm)
பார்வை : 468

மேலே