காதல் சிந்தனை

காதல் சிந்தனை

காதல் சிந்தனை
மனதை அரிக்க
எல்லாம் காதலாய்க்
கண்களில் தெரித்து
ஆள்மனம் தன்னில்
ஆட்டம் காட்டும்.


பொது இடங்களிலும்
காதல் கும்மாளங்கள்
நடப்பதாய்க் காட்டும்
திரை நெறியாளர்
சொல்வதை யெல்லாம்
வேதமாய் எண்ணி

சிந்திக்க மறந்த
தமிழ்க்குடி மக்களே
பொது இடங்களில்கூட
காதலர் கொட்டம்
ஆடலும் பாடலும்
கட்டி அணைப்பதும்
நடைமுறை வாழ்க்கைச்
சம்பவம் ஆக்கினால்
காறித் துப்பாரோ
காண்பவர் எல்லாம்.

அறுபது ஆண்டுகள்
இடைவெளி இன்றி
இதைமட்டும் தானே
காதல் என்று
திரை நெறியாளர்
காட்டித் தொலைக்கின்றார்.


காதல் என்பது
காட்சிப் பொருளாய்க்
கண்ட இடங்களில்
நடக்கும் கூத்து.
திரையின்பம் ருசிப்போர்
பழகிய சுவையே.

கெட்டதை யெல்லாம்
யார் திணித்தாலும்
சிந்திக்காமலே ஏற்றுகொண்டு
அவர்க்காய் உயிரையும்
கொடுத்திடத் துணிவார்
பைந்தமிழ்த் தாயின்
பிள்ளைகள் சிலரும்.

எழுதியவர் : மலர் (20-Jan-15, 2:58 pm)
Tanglish : kaadhal sinthanai
பார்வை : 196

மேலே