தைப்பொங்கலை நோக்கி

நெற்றியில் கரத்தை வைத்து
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
பட்டம் வாங்கிய பிள்ளையை காட்டிலும்
கருமேகம் வட்டமிடுவதை கண்டு
கண்கலங்கும் அவன்!

கைபேசியை காதலித்து கணினியை மணமுடித்து
பணம் தான் அண்டம் என வாழும்
தண்டன்களுக்கு மத்தியில்
வட்டி வாங்கி கடன் தாங்கி
பிறர்க்கு உணவளிக்கவே பிறந்தவன் அவன்!

ஆடம்பரத்தை அம்பலபடுத்த
தொலைகாட்சி முன் அமர்ந்து
பீட்சாவும் பர்கரையும் உண்ணும் இப்பாரில்
கூழையும் கஞ்சையும் உண்டு ஆடம்பரத்தை
தொலைவில் ஒரு காட்சியாக மட்டும் வைத்து
வாழும் அவன்!

பனாரஸ் பட்டையும் ஆலென் சாலியையும் அணிந்து
கண்ணாடியின் முன் காலம் கழிக்கும் மாந்தரின்கண்
விழியில் நீர்தேங்க நெற்கதிரை கையில் ஏந்தி
தன் கன்னத்தோடு தழுவி
அழகு பார்க்கும் அவன்!

பெயரறியா பெண்ணின் கைப்பட அருகிலாடும் ஆணின் தோள்தொட
பியரை கையில் கொண்டவன் மனிதனாயின்
மேனியில் வெயிற்பட பாதங்களும் புண்பட
ஏறினை கையில் கொண்டு நடந்த
மாமனிதன் அவன் தான்!

விருந்தோம்பல் என்ற பண்பிற்கு
உன்னத எடுத்துகாட்டாய் விளங்கும் அவன்
தைப்பொங்கல் வருவதரியாமல்
மாரியை எதிர்நோக்கி
மன்றாடி காத்துகக்கொண்டிருகிறான்!

சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு
சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து
பானை பொங்குவதுபொல் கோலமிடுதல்
தைப்பொங்கல் என்றால்

வட்டிக்கு பணம் வாங்கி
விவசாயத்திற்கு நீரின்றி
புதுச்சட்டை கேட்கும் பிள்ளையின்
முகத்தை பார்க்க முடியாமல்
பூச்சுமருந்து குடித்து சாகும் விவசாயிக்கு, அந்நாளின் பெயர்?

அண்டத்திர்கே படியளக்க வந்த
அந்த விவசாயி தெய்வத்திற்கு
பின்டம் வைத்து வழிபடகூட ஆளில்லாமல் போகிறான், காரணம்
இறப்பது அவன் மட்டுமல்ல
அவன் மொத்த குடும்பமும் தான்.

ஒரு பாப்படகரின் மரணம், மனஉளைச்சல்
ஒரு இயக்குனரின் மரணம், பேரூர்வலம்
ஒரு கிரிக்கெட் வீரரின் மரணம், பாதிப்பு
ஒரு அரசியல்வாதியின் மரணம், கடையடைப்பு, ஆனால்
ஒரு விவசாயின் மரணம், வாசகத்தில் ஒரு துண்டுச்செய்தி

உணவருந்தும் போது தொண்டை விக்குகையில்
தண்ணீர் கிடைத்தால் அது தாயம்!
நமக்கு உணவளிக்கும் பரம்பரையான
விவசாயிகள் விளைநிலங்கள் இல்லாமையால்
செத்துமடிவது என்ன ஞாயம்!

நகத்தில் சிக்கிய சோறு கரங்கழுவிப் போதல் பேதமல்ல, ஆனால்
தூக்கு கயிறில் முடிந்த விவசாயியின் சாவு
காற்றோடு போதல் ஞாயமல்ல!
விவசாயியின் வறுமையையும்
கோரச் சாவையும் செய்தியாக படிக்கும் நாள்
நமக்கு பொங்கலும் அல்ல

என்றோர் உழவன் வறுமையில் மரியான் என்ற நிலைப்பெற்று
வாழ்வாங்கு வாழ்கிறானோ
அன்றே ஒரு நற்றமிழனுக்கு தைப்பொங்கல்!

பொங்கலை நோக்கி நடக்க முயல்வோம்!!!

எழுதியவர் : வசந்த்குமார் (9-Jan-15, 9:13 pm)
சேர்த்தது : வசந்த்குமார்
பார்வை : 93

மேலே