இயக்குனர் சிகரம்
கலைக் கடலில் நீர் எடுத்த
முத்துக்கள் பல
ஆழத்திலும் அழுத்தத்திலும் செய்தீர்
எதிர் நீச்சல்
நீர்குமிழியைத் தந்து நெஞ்சில்
நீங்கா இடம் பெற்றீர்
தமிழ் மொழியின் பெருமை அன்றோ நீர்!
பிற மொழியிலும் நின் புகழுக்கு குறைவுண்டோ ?
திறமை கண்டு வாய்ப்பளித்தீர்
புதுமைக்கு உருவம் படைத்தீர்
இயக்குனர் சிகரம் மட்டுமா நீர்?
கற்பனையின் ஊற்றும்
கனவின் நிஜமும் அல்லோ ??!
நின் சேவை வாழ வைத்த குடும்பங்கள்
கோடி கோடியும் கணக்கில் வருமோ ?
கடவுளும் சிந்தித்தார் ,
இச்சிந்தனைப் புயல் தேவை விண்ணுலகிற்கு என்றோ ?
பிரிந்தாய் இவ்வுலகை ...
ஆனால்
என்றும் பிரியாமல் எங்கள் மனதில் .!!
#archu