வசந்த காலம்
மயிலிறக புத்தகத்தில் வச்சு
அது குட்டி போடுமான்னு காத்துகிடந்தோம் .....
ஒரு ரூபாய்க்கு சைக்கிள் எடுத்து ஒருமணிநேரம் ஓட்டுவோம் ...
சங்க எடுத்து காதுல வச்சு அலை ஓசைன்னு கேட்டு ரசிச்சோம் .....
மணல் குவியல் கிடைத்தால் போதும் ஆளுக்கொரு வீடு கட்டுவோம் ....
கண்ணாமூச்சி விளையாடையிலே தெருவுல எந்த வீட்டு கேட்டுளையும் ஒளிவோம் ...
ஆனால் இப்பொழுது அபார்ட்மெண்ட்டில் எதிரே யார்
பக்கத்தில் யார் என்பது கூட
தெரியாமல் வாழ்கிறோம் ...
இது என்ன வாழ்க்கை
அய்யோ ..மீண்டும் மழலையில் நுழைந்தால் என்ன ???
மீண்டும் ஒருமுறை பிறந்தால் என்ன ????