உயிரே நீ தானடி

அன்பே என்று அழைத்த
போதெல்லாம் ஆதரவாய்
இருந்தாய் நீ..
ஆசை படும்
போதெல்லாம் உன்னையே
தந்தாய் நீ.
இன்பமாய் இருந்த
போதெல்லாம் தேனாய்
இனித்தாய் நீ.
ஈடு பட்டேன் நானும்
உன் மீது ஈர்பாய்
இலவசமாய்.
உன்னை நான் தொடும்
போதெல்லாம் உண்மையாய்
இருந்தாய் நீ..
ஊரே என்னை குற்ற படுத்திய
போதெல்லாம் எனக்கு
சாதகமாய் இருந்தாய் நீ..
எப்படி யார் சொன்னாலும்
என்னவள்
நீதானடி.
ஏற்று கொண்டது
என் நெஞ்சம் உன்னை
என் மனைவியாய்.
ஐந்து புலன் பெற்று
அழகாய் நான் உன்னை
வாழ வைப்பேனடி..
ஒரே ஒரு மனைவியும்
நீ தான் என்றும்
சத்தியம் செய்வேனடி.
ஓர் ஆயிரம் ஆண்டுகள்
உன்னுடன் நான் வாழ
உனக்கு உரிமைகள் தருவேனடி.
ஒளவையை போல் நீயும்
பெயர் வாங்க உன்னை
வாழ்த்துகிரேனடி..