அவள் ஒருவள் -சகி
@@அவள் ஒருவள் @@
கல்லூரிநாட்களில் காதல்
வசம்கொண்டு தன் வாழ்வு
நாசம் ஆகுமென அறியாது
கல்யாண மாலையும் சூடி
வருடங்கள் பல அவன் குறை
மறைத்து வாழ்ந்தாள் மலடி
என்ற பட்டத்துடன் ....
அவன் குறை பிறர் அறியார்
இருவரும் அரைகுறை
சந்தோசத்துடன் வாழ்ந்தனர் ...
கன்னியவள் நன்னடைத்தையில்
நம்பிக்கையின்றி வார்த்தைகள்
பல விட்டெறிந்தான் மனையாளன் ....
பொறுத்தது போதுமென
படிதாடி வந்தாள் அவள்
பத்தினி தான் இன்றும்...
மருத்துவத்தை நாடிசென்று
தன்குறை தீர்த்து வேறொரு
பெண்ணை கைப்பிடித்தான் ...
வேறொரு மணமாலை
அவன்சூட மங்கையவள்
மனம் வாட ஆண்டுகள்
பல ஓட அவப்பெயர்
அவள் பெற ...
ஆண்டுகள் சில செல்ல
அனைத்தும் அறிந்த உத்தமன்
ஒருவன் இவள் கரம்
பற்ற ஆசைகொண்டு அவளிடம்
சொல்ல வீட்டு சம்மதம்
இவள் கேட்க சம்மதம் இல்லை
இவள் பெற்றவர்களுக்கு
காரணம் சாதி என்ற சாத்தான்...
பெற்றவர் விருப்பம்
நிறைவேற்ற வேறொரு
மணவாளனுக்கு மாலை சூட
தயாராகிறாள் ....
அவனும் மணமாகி
மனையாளை விவகாரத்து செய்து பிரித்து வாழ்பவனே ....
அவன் மாலை சூடும்முன்னே
படுக்கை அறைக்கு அவன் அழைக்க
மனம் நொந்து கண்ணீரிலே
கரைகிறது இவ்வாழ்வும்
மரணமே என்று....
பெண்ணின் உடல்கள்
மட்டும் சதையல்ல ...
அவளுக்குள் துடிக்கும்
இதயமும் சதை தான்....
பெண்ணின் உடல் அழகுக்கு
கிடைக்கும் மரியாதையும்
மதிப்பும் பெண்ணவள் மனதிற்கு
கிடைப்பதில்லை சிலரிடம் ...
மனதில் ஒருவனை
சுமந்துக்கொண்டு மணமாலை
வேறொருவனுக்கு சூடும்
நிமிடம் அவள் மனதளவில்
உயிர் அற்றவளே ....
( இது நிஜம் தோழமைகளே....பெற்றவர்கள்,கட்டியவன் ,கரம் பிடிக்க ஆசைபாட்டவன் ...இன்று மணமாலை சூட காத்திருப்பவன் என எவருமே அவளை புரிந்துக்கொள்ளவில்லை ...ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியே ..தவறாக ஏதும் இருப்பின் மன்னிக்கவும் )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
