விண்மீன்
இரவில், விண்ணிலெலாம்
பொன்னொளியை வீசுகின்றாய்!
மானுட சிந்தையை மயக்கி,
காட்சி இன்பம் கொடுக்கிறாய்!
கன்னிப் பெண் உருவமாகி,
கவிஞர்களின் கவிதைகளில் உருவெடுக்கிறாய்!
அக்னியான உன்னைக் கண்டோரை,
கண்கொட்டாமல் ரசிக்கச் செய்கிறாய்!
தூண்டிலில்,
சிக்காத மீனே!!!
உன்மேலுள்ள என் நேசத்தை
சிப்பிக்குள் முத்தைப் போல,
மூடி மறைக்கிறேன்.
என் எண்ணலையில் நுழைய,
வானில்;
மின்னி மின்னி மறையும்
விண்மீனே! – தினமும்
மெல்ல மெல்லி கீழிறங்கி
மெதுவாய் என்னுள் வந்துவிடு.
அனுப்பி வைக்கிறேன்,
பத்திரமாக உன்னை.
இரவில் மட்டும்!!!