வர்ணன் மகனே உன்னை வரவேற்கின்றேன்
வா வா வர்ணன் மகனே
வரவேற்கின்றேன் உன்னை
நான் ...
வளைந்திடும் நதிகளையும்
வற்றாத நீர் ஊற்றையும்
வாரி வழங்கிய வள்ளல் மகனே
வா வா வரவேற்கின்றேன் உன்னை .
மண்மேல் கொண்ட காதலினால்
விண்ணை பிரிந்து வரும்
வேந்தன் மகனே வரவேற்கின்றேன்
உன்னை நான் .
இடைவிடாமல் வந்து
இன்னல் தராமல்
இடையிடையே வந்து ஈரமாக்கி
மண்ணை
ஏழைதுயர் போக்க
மனம் கவர்ந்த மழையே மணற்கரைப்பானே
மண்டியிட்டு வேண்டுகின்றேன்
வசந்தம் வேண்டும்
மண்ணி
மனிதர் வாழ வேண்டும்
வருணன் மகனே என்றும்
வரமாய் பூமி வர வேண்டும்
அதனால் உன்னை
வா வா என்று வரவேற்கின்றேன் .