சீறும் பனித்துளி

முன் குறிப்பு:

ஐயா ரமணி லோகநாதனின் "மீண்டும் வருவேன்" (கவிதை எண் 226106) கவிதையின் வரிகள்:

"விரட்டிய வீரியத்தில் வெய்யோனும்
வீறாப்புடன் வீறு கொள்ள
சற்றே நகைத்தன பனித்துளிகள்
வெல்வது எம்மை கடினமென்று "

பனித்துளி சீற்றம் கொள்வதாக நான் தொடர்ந்தேன்.
அய்யாவின் அனுமதியுடன்:
---------------------------------------------------------------------
பனித்துளியின் சீற்றம்
======================

எமை எவர் சுட்டெரித் தாலும்
சுடராய் சூட்சும மாய்
சூனியத்தை உடைக்க
சூழ்ந்திடு வோம் சூரியனை
அவனும் குளிர்ந் திடுவான்
வெய்யோன் வெய்யி லிடான்
வெண் பனி சூழட்டும்

ஒற்றையாய் இருப்பதால்
எம்மை உதாசினும் செய்தீரோ
சேர்ந்தெ ழுந்து வீழ் அருவி
பேரிரைச்சல் நீ தரும்
சுட் டெரிக்கும் மின்சாரம்
சுடராய் யாம் அளிப்போம்

அருவி சூழ் நதியாகி
மருவி கடலா னோம்
எம் மக்களை தொடர்
நச்சரிப்பு தொடர்ந்தால்
பொங்கியே சுனாமியாய்
எம்பிப் பிடித் திடுவோம்

எங்கு நீ குளிர்ந்து கறுத்து
எங்கள் கவிஞர்க்கு ஒளி
தாராயோ என விட்டோம்
தரா தரமறிந்து பழகு நீ!

----- முரளி

எழுதியவர் : முரளி (25-Dec-14, 2:18 pm)
பார்வை : 118

மேலே