ஆன்ம வாழ்க்கை

கோவில் குல வழிபாடுகள்!
தவிர்க்குமே மனித குல இடர்பாடுகள்!

இம்சையாய் அண்டும் பிரச்சினைகளை!
இயல்பாய் கடத்தும் தந்திரங்கள்!
ஆன்மீக மந்திரங்கள்!

கால நேர சாத்திரங்கள்!
கவச குண்டல கோட்பாடுகள்!

அறிவின் புரட்சி அறிவியலாம்!
அகமாய் மனதின் கிளர்ச்சி ஆன்மீகம்!

அச்சத்தை நீக்க அரண் வேண்டும்!
அகத்துள் நிம்மதி பலம் வேண்டும்!

ஆலயம் ஆண்டவன் அகம் நிறுத்தும்!
ஆன்மா அதிசயம் பல நிகழ்ந்தும்!

அமைதியாய் ஆண்டவன்
அகம் காண்பர்!
ஆழ் நிலை தியானம்
ஆட்கொண்டவர்!

எழுதியவர் : கானல் நீர் (26-Dec-14, 8:47 pm)
Tanglish : aanma vaazhkkai
பார்வை : 67

மேலே