வலி மிகு நேரம்
சாய்வதற்கு தோள்களை
தேடினேன்..
வலி மிகுந்த நேரத்தில்..
இறந்த தந்தையின்
நினைவுகள்
நின்றன..
தாங்கும் தோளாக..
வலி நீக்கும் மருந்தாக..
பிணி தடுக்கும் காப்பாக ..
எழுந்து நிற்க வைக்கும் இதயமாக..
நம்பிக்கையுடன் நடக்க வைக்கும் சக்தியாக..
எல்லாமாக..!
வாழ்கிறேன் மனிதனாக! .
இல்லாமல் என்னோடு இருக்கின்றாய்..
இப்படியே இருந்து விடு என் இறுதி வரை!

