வேதனை
சுட்டுதள்ளிய குழந்தைகள்
வெட்டிஎறிந்த தலைகள்
உங்களை படைத்தவன்தானே
அவர்களையும் படைதான்
அவர்களுக்கு வலித்திருக்குமே
உங்களுக்கு வலிக்கலையோ
எங்களுக்கு வலிக்குதின்னும்
நீ பெற்றெடுத்த பிள்ளை
பென்சில் கூர்தீட்டிட
கையில்பட்டு குருதிகொட்ட
பதறியவன் நீதானே
எத்தனை பெற்றோர்கள்
எத்தனை கனவுகள்
கனவுகளும் கண்ணீரும்
எரித்துவிடும் உங்களை
இனியும் வேண்டாம்
இதுபோல் வேதனை ..........