வன்முறை

( சமீபத்தில் தீவிரவாதிகள் ஒரு அப்பாவி மனிதனை கழுத்தை அறுத்து கொலை செய்யும் ஒரு செய்தி பதைபதைக்க வைத்தது)
இதயம் வெடிக்கிறது
இயங்க மறுக்கிறது
இரக்கமற்ற செயலால்
அந்தகத்தி கூட
கதரி இருக்கும்
அவர்கள் கையில்
இருந்ததை எண்ணி
கையை பிணைத்திருந்த
கைருகூட துடித்திருக்கும்
இவர்களுக்கு தூக்குகைராக
இரக்கமற்றவர்களே என்றாலும்
இது செயலாகுமோ
மாண்டவன் அறிவானோ
இதை செய்வார்களென்று
எதை சாதிக்கபோகிறார்கள்
உலகை சுடுகாடாக்கி
பலியான குழந்தைகள்
உயர்விட்ட நெஞ்சங்கள்
உங்கள் உரவாஇருந்தால்
புன்னகை புரிவாயோ
கத்தியோடு போராடி
பெற்ற வெற்றியை
யாரோடு கொண்டாடுவாய்
உங்கள் குழந்தைகள்
விளையாடுவது வெட்டியெறிந்த
உடல் தலைகளோடா ?
உங்கள் கடவுள்கூட
உங்களை மன்னிக்கமாட்டார்
இனியும் பலியாகவேண்டாம்
இன்னும் ஓருயிர்
கொடியவர்களின் தீவிரவாதத்திற்கு
மீறினால் வாளடுப்பது
உங்களை படைத்தவனே
இனியும் இராது
பொறுமை அவனுக்கு ...............