என் பேருந்து பயணம்

திருநெல்வேலி சீமையிலே
காற்றாலையின் நகரத்திற்கு
பேருந்தில் ஊர்வலமாம்
கடும் குளிர் காலையிலே
பனைமர சாலை ஓரத்திலே
ஒய்யார பயணமாம்
ஜன்னல் ஓர இருக்கை தான்
வெளியே கண்களின் தேடலிலே
ஓர் அற்புத பயணமாம்!!!
சென்ற காரியம் வாய்க்கவே
பறவைகள் திரும்பும் வேளையிலே
நானும் தயாரானேன் வீட்டிற்கு
அப்போது ஏற்பட்ட கலவரத்தால்
பேருந்து பயணம் வாய்க்கவில்லை
திரண்ட மக்கள் கூட்டத்தில்
ஓவ்வருவரும் ஓரு இலக்கை நோக்கி !
குட்டி யானை லாரி பயணத்தில்
மக்கள் கூட்டம் குறையவில்லை
இருமணி நேர வேடிக்கை
பார்க்கும் மானிடர் பலவிதமே
கடைசியில் வந்தான் ஒய்யாரமாய்
மாந்தர் யாவரும் முதுகினிலே
ஏற இயலா பாட்டியும்
முதல் ஆளாய் ஏறவே
மக்கள் பெருவெள்ளத்தில்
நானும் தோற்றி கொண்டேனே
மெல்ல நகரும் நத்தையாய்
பேருந்து பயணம் ஆரம்பம்
கையில் இருக்கும் பைதனை கொடுக்க,
அருகினில் பெண்கள் எவரும் இல்லையே
அண்ணன் ஒருவர் கண்டேனே
ஒய்யாரமாய் இருக்கையிலே,
கொடுத்தேன் பையினை அவரிடமே
அன்பாய் ஏற்று கொண்டாரே !!
ஒருவர் படும் கஷ்டத்தை
மற்றவர் அறிந்து செயல்பட்டால்
துயரம் உலகினில் தோற்க்குமே
எண்ணி வியந்து பூரித்தேன்
ஏறியது கூட்டம் ஒருவூரில்
களைகட்டியது சண்டை தானே
ஆரம்பம் செய்தார் பெரியக்கா
என்னை ஏன் தள்ளுகிறாய் ?
வாய் சண்டை முற்றும் தருணத்தில்
நடத்துனரின் பிரவேசம்
அருகில் நின்ற எனக்கும் தான்
சிரிப்பை அடக்க இயலவில்லை
மயங்கிய பாட்டிக்கு இருக்கை
அளித்ததும் இவ்வுலகமே
கூட்ட நேரிசல் கலகத்தில்
சண்டைக்கு பஞ்சமில்லாத இவ்வுலகமே
விட்டுக் கொடுத்த வாழ்வுதான்
எத்தனை பேரானந்தம்
மானிடா உணர்த்து கொள்வாயே!!
அருமையான பாடத்தை
நானும் கற்று கொண்டேனே
என் பேருந்து பயணத்தில் !!!

எழுதியவர் : ஹெலன் வேதநாயகி அனிட்டா (31-Dec-14, 6:29 pm)
சேர்த்தது : Helen Vedanayagi Anita
Tanglish : en perunthu payanam
பார்வை : 343

மேலே