நாகரிக மோகம்

நாகரிக மோகம்

கொக்குக் கால்களா
கொழுத்த கால்களா
எக்கால்கள் என்றாலும்
கால்களோடு ஒட்டிய
ஆடையை அணிந்து
கால் வடிவமைப்பைத் துள்ளியமாய்
காண்பவர் இரசிக்க
பவனி வருவது
அணிந்தவர்க்கும் பெற்றோர்க்கும்
மணந்தவர்க்கும் உடன்பிறந்தவர்க்கும்
உற்றார் உறவினர்
நண்பர் குழாமுக்கும்
அளித்திடும் பேரானந்தம்
நாகரிக மோகம் தரும்
நித்தியானந்தம்
புதிய நூற்றாண்டின்
பரமானந்தம்.


(கருத்து தவறு என்றால் விலக்கிவிடுகிறேன்)

எழுதியவர் : மலர் (31-Dec-14, 11:36 pm)
சேர்த்தது : மலர்1991 -
Tanglish : naakarika mogam
பார்வை : 151
மேலே