மூலப் பொருளோனே மூஷிக வாகனனே
முந்தி விநாயகனே முக்காலமும் படைத்தவனே
முன்னேற வைப்பவனே முயற்சிக்க சக்தி தருபவனே
மூஞ்சுறு வாகனனே எம் மூச்சிலே கலந்தவனே
முதல் பொருளே முன்னவனே வணங்குகிறேன் உன்னை ஐயா...!!
புதுக் கவிதை நீ எழுத இதோ புத்தாண்டு பிறந்து விட்டது
புலம்பி தவித்த கவலையெல்லாம் நேற்றோடு மறந்து விட்டது
பூரித்தே இறகு முளைத்து எமது மனசு பறந்து விட்டது
புது வாழ்வை வரவேற்க எமது இதயம் திறந்து விட்டது
இந்த விடியலை இந்த நாளை இனிமையாக்கினாய் தமிழோடு
இறைவனே உன் பாதம் பணிந்தேன் எமைக் காப்பாய் அருளோடு....!!