ஞான முதல்வனே நாயகனே

தொடங்கி விட்டேன் முதல் கவிதை
தும்பிக்கையானே துணை புரிவாய்

தமிழோடு எமக்குள்ளே தன்னடக்கமும்
தான் வைத்து தரணியிலே மகிழ வைப்பாய்

தாயுணர்வோடு பழக வேண்டும் - உயிர்கள்
தன்னம்பிக்கை கொண்டு வாழ வேண்டும்

வெற்றி மாலை சூட வேண்டும் - உன்னை மறவா
புத்தி தந்தே எமை தேற்ற வேண்டும்.....!!

பணிவோடு நின் தாள் பணிந்தேன் - எம்
பைந்தமிழ் மொழியை பார் எல்லாம் பயில அருள் புரிவாய் அப்பா....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (1-Jan-15, 7:55 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 152

மேலே