புன்னகையில் புத்தாண்டு

புன்னகை பூத்து வந்தனள் புத்தாண்டினள்
இன்முகம் காட்டி வரவேற்றேன் ---புதுமை
செய்யவே வந்தனள் செப்பினள் தமிழினில்
பொய்யா கவிநீ எழுது.

------கவின் சாரலன்

கவிக் குறிப்பு : இதை முற்றிலும் புத்தாண்டு வெண்பா ஆக்கவேண்டும்.
விரும்புகிறவர்கள் முயலலாம் . பதியலாம் .
நானும் முயல்கிறேன்

கவி நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-15, 6:56 pm)
பார்வை : 99

மேலே