நான்

நான்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
காத்திருக்கும் கொக்கு !.
நீரொழிய பாலுண் குருகு !
பன்னாட்டுப் பறவைகளும் பறந்து வர
காத்திருக்கும் இதயம் தாங்கல் !
இதய வானங்களை தேடி
பாடி வரும் வானம்பாடி !
கவிதாலயத்தில் கை கூப்பி நிற்கும்
முதல் பக்தன் !
பெருகி வரும் கவிதை நீரோடையை
அள்ளிப் பருகும் வழிப்போக்கன் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-15, 7:01 pm)
Tanglish : naan
பார்வை : 107

மேலே