என்னைப்பற்றி சுயசரிதை
நான் கிராமத்தான்
வறிய குடும்பத்தின் அங்கத்தவன்
சிறிய குடிசைக்கு சொந்தமானவன்
ஏழ்மை வாழ்வை அங்கமாகக் கொண்டவன்
ஏளனத்துக்கு ஆளானவன்
எளிமை சிறப்பென கழிப்பவன்
கட்டிலிருந்தாலும்
தரையில் கொஞ்சம் தலை சாய்ப்பவன்
கனவிலே ஊரழிந்தலும்
நினைவிலேழுந்து அழுபவன்
உயிர்கள் அடாவடியாகக் கொல்லப்படும் போது
உதிரக் கண்ணீர் சிந்துபவன்
என்னோர்களின்
மனக்குமுறல்களை
எழுத்துக்களாக்கி எடுத்துரைப்பவன்
முன்னோரின் வார்த்தைகளை
முடியாக அலங்கரிப்பவன்
கலப்பை தூக்கிய உழவனாக
எழுதுகோல் ஏந்திய உழவன் நான்
அகங்காரம் கொண்டவனிடம் ! எனது அசையாது
மார்பு நிமிர்ந்தே நிற்கும் !!
சிறந்தவனிடம்
எனது சிரம்தாழ்ந்தேயிருக்கும்!!