நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015

நாளைய தமிழ் நலம் பெறுவாள்
கிழிந்த தன் நூல் ஆடைகள் கணினிகளில் புதுப்பிக்க கண்டு கலியுருவாள்
சிந்திய மணியும் உடைந்த சிலம்பும் சிறப்புற சிரித்து ரசிப்பாள்
வான் புகழ் தந்த வள்ளுவனை வாழ்த்தி மகிழ்வாள்
புரட்சி பிள்ளை பாரதியையும் புதுமை பிள்ளை பித்தனையும் உச்சி முகர்வாள்
தன் தமிழினம் பயில - தான் மீண்டும்
வல்லினம் மெல்லினம் இடையினமாவாள்
தன்னை தொலைத்த பிள்ளைகள் தாவி வந்து தழுவும் இன்பம் பெறுவாள்

நாளைய தமிழன்
அள்ளி பருகுவான்
ஆங்கிலத்தை
இதர மொழிகளில் இமயம் தொடுவான்
ஈன்ற மொழியின் பெருமை மறப்பான்
உன்னத உயிர் உயர் தமிழில்
ஊமையாவான்
எண்ணத்தில் சிறக்க
ஏங்கி தவிப்பான்
ஐயம் கலைப்பான்
ஒப்பிலா தமிழ்
ஓதி திளைப்பான்- இதை அந்த
ஔவை ருசிப்பாள்-- மீண்டும் தமிழ்
ஆயுதம் ஏந்துவான்
திரை கடல் கிழித்தாவது தன் இனத்துயர் துடைப்பான்.


எழுதியவர்: இளவரசன் (சங்கீதா இளவரசன் எனும் பெயரில் எழுதுகிறேன்)
உரிமம்: எனது படைப்பு என உறுதிப்படுத்துகிறேன்
வயது: 31
வாழ்விடம்: சேடக்குடிக்காடு
வட்டம்: செந்துறை
மாவட்டம்: அரியலூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: 08050752171, 09160837936

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (4-Jan-15, 1:15 am)
பார்வை : 99

மேலே