நாளைய தமிழும்,தமிழரும் - “பொங்கல் கவிதை போட்டி 2015”

சங்க நூல்கள் அனைத்திலும்
சமுத்திரமாய் பரவிக் கிடக்கிறாள் தமிழ்,
அரிய அமிழ்தம் இத்தமிழை
அனைவர்க்கும் கொடுத்தவன் தமிழன்..!
நண்பனுக்காக நஞ்சையும் உண்ணும்
நயத்தக்க நாகரீகம் கொண்டவன்,
தமிழர்களின் இந்நனி பண்பாடு
தரணி போற்றிய பெருமை கொண்டது..!!
ஊரார் அனைவரையும்
உற்றார் ஆக்கி,
தனக்கென வாழாது
பிறர்க்கென வாழ்ந்து சிறந்தவன்..!!
இப்போது நுனிநாக்கு மொழிக்கலப்பில்
இருக்கும் தன்மானம் இழக்கிறான்,
பரிணாம வளர்ச்சியில்
பரிமாணம் அடையத் தவிக்கிறான்..!!
இலக்கணம் கற்கவேண்டாம்
தலைக்கனம் இல்லாமல் இருங்கள்,
தமிழர் என்று தன்னிலை விளக்க
தவறாமல் முன்னிலை பெறுங்கள்..!!
தமிழின் பெருமையை தமிழன் உணர்ந்தால்
உலகம் மதிக்கும் உன்னத இனமாக
தமிழினம் மாறும் காலம்
வெகுவிரைவிலேயே மலரும் ..!!