பொங்கல் கவிதைப்போட்டி பரிசு விவரங்கள்

வணக்கம் தோழர்களே...

2015ம் ஆண்டிற்கான பொங்கல் கவிதை அறிவிப்பை “போட்டிகள்” பிரிவில் பதிவேற்றி இருக்கின்றோம் என்பதை அறிவீர்கள்.

மிகப்பெரிய பணப் பரிசுத்தொகையுடன் படைப்பாளிகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஆக்கங்களை எழுதுவதற்கென மூன்று தலைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை

• சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
• நாளைய தமிழும் தமிழரும் !
• இப்படி நாம் காதலிப்போம் !

மேலுள்ள மூன்று தலைப்புகளிலும் கவிதைகளை எழுத யாவரையும் பெருமையுடன் அழைக்கின்றோம்.

சமுதாயத்தின் எழுச்சியையும் விழிப்பையும் தூண்டுவதற்கான சக்திகளாக படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

வருடா வருடம் திரு. நிலாசூரியனின் அளப்பரிய முயற்சியிலும் அர்ப்பணிப்பிலும் இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டது. இம்முறை அவரது ஆசிகளை பெற்றுக் கொண்டு இந்த போட்டி அறிவிக்கப்பட்டிருக்கின்றது !

வழங்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புகளிலும் படைப்பாளிகள் ஆக்கங்களை வழங்க வரவேற்கப்படுகின்றீர்கள். ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே ஒரு படைப்பாளி எழுதலாம். மூன்று தலைப்புகளிலும் மூன்று கவிதைகளை எழுத வாய்ப்புண்டு.

இந்தப் போட்டிக்கான நிபந்தனைகளையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்கு தளத்தின் “போட்டிகள்” பிரிவில் இருக்கும் “தைப்பொங்கல் கவிதை திருவிழா” என்ற தலைப்பின் கீழுள்ள அறிவிப்பைக் காணுங்கள்.
பரிசு விபரங்கள்
==============
முதலிடம் பெறும் மூன்று கவிதைகளுக்கு
தலா 1500 ரூபாய்கள் வீதம் = 4500 ரூபாய்கள்

இரண்டாமிடம் பெறும் மூன்று கவிதைகளுக்கு
தலா 1000 ரூபாய்கள் வீதம் – 3000 ரூபாய்கள்

மூன்றாமிடம் பெறும் மூன்று கவிதைகளுக்கு
தலா 500 ரூபாய்கள் வீதம் – 1500 ரூபாய்கள்
==============
ஒவ்வொரு தலைப்பிற்கும் முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் என ஒன்பது படைப்பாளிகளுக்கு பணப்பரிசிகள் காத்திருக்கின்றன. பலருக்கும் பரிசிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றோம்.

மொத்தம் 9000 ரூபாய்கள் பரிசாக வழங்கப்படும் என்பதை பெருமையுடனும் உற்சாகத்துடனும் தெரிவித்துக் கொள்வதில் பேரானந்தம் அடைகின்றோம்.
படைப்பாளிகள் அனைவரையும் வரவேற்கின்றோம்.

இந்த அறிவிப்பை தாங்கள் அனைவரும் பகிர்ந்துக் கொண்டு படைப்பாளிகளை தைப்பொங்கல் கவிதைத் திருவிழாவில் இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
விழாக்குழு !

எழுதியவர் : (2-Jan-15, 8:50 am)
பார்வை : 195

சிறந்த கட்டுரைகள்

மேலே