அவளும் அவனும்
அவளும் அவனும்....
ஒரு ஆற்றங்கரையில் ஈரச்சுவடுகளை பதித்துக்
கொண்டு ஓர் பெண் நடந்து செல்கிறாள் இல்லை
இல்லை மிதந்து செல்கிறாள் ..
தாயின் வாசத்தைத் தொடர்ந்து செல்லும் குழந்தை
போல அக்கரையோர கண்ணகியின் வாசத்தைப்
பெற அச்சுவடுகளை பின்பற்றுகிறான் ஒரு இளைஞன் ..!
ஊரடங்கு சட்டம் போட்டதொரு தனிமையில்
சுட்டெரிக்கும் கதிரவனையும் மொட்டைப்
பாறைகளையும் துணையைக் கொண்டு ..
அப்பெண்ணின் மகரந்தக் கூந்தலின் மனத்தைக்
காற்றில் தேடலயினான் ....
ஆண்களுக்கே உரிய மனவலிமை மறந்து போய்
கானகத்தை காகித மாக்கும் தன் வீரம் குன்றிவிட அவன்
தன்னிலை மறந்த ஓர் அகதியை பிறந்த ஊரில் அலைகிறான் .!
மெல்லிய உடல் படைத்த அப்பெண்ணின் காந்தத்
தன்மையால் ஈர்க்கப் பட்டு ஈர்ப்பு விசை காரணமாக
அவளோடு சேர்ந்து விட்டதாய் உணர்கிறான் ..!
அவ்விளைஞன் தன்னை பின் தொடர்வதை உணர்ந்த
அப்பெண்,கொடியில் படர்ந்த முல்லைச் செடியாய் தன்
பார்வையை அவன்மீது படர விடுகிறாள் ..!
அவளது பார்வை படர்ந்த மறுகணம் உயிரற்ற உடலைக்
கொண்ட அவன் மனம் செயலற்றுப் போக அவ்விளைஞன்
அந்த இடத்தை விட்டு அகலவில்லை ..!
படர்ந்த அப்பார்வை மறைந்து விட சற்று நேரம் கழித்து,
இதழின் ஓரத்தில் புதிதாய் புத்த மலராய் புன் சிரிப்போடு
அவளது கடைவிழி மீண்டும் அவன் மீது விழுந்தது ..!
செயலற்று இருண்ட அவன் மனம் அப்புன்னைகையின்
வெளிச்சத்தில் மிளிர, கடைவிழி தரிசனத்தால் அவளிடம்
தஞ்சம் அடைந்த அவன் உயிர் மோட்சம் பெற்றது ..!!!!