வேத வார்த்தை
![](https://eluthu.com/images/loading.gif)
வழக்கமான நலம்
விசாரிப்புகளில் கூட-உன்
வழக்கத்திற்கு மாறான காதலை
வெளிப்படுத்துகிறாய்! - உன் அன்பை
வென்றுவிட எத்தனித்து
வெறுமையான தோல்விகளை மட்டுமே
வெற்றி வாகையாய்ச் சூடிக்கொள்கிறேன்!
வெற்றுடம்பாய் நான் கல்லறையில்
விதைக்கப்படும் முன்பேனும் சொல்லிவிடு அன்பே - உன்
வேதவார்த்தையை ! அந்தக் காதல் வார்த்தையை!