சுற்றம் மறந்து

உன்னைக் குடித்திருக்கும்
விளக்கைப் போலவே
என்னையும்
குடித்துக் கிடக்கிறது
நிலா... புரியாத மொழி வரைந்து
சொல்லியிருந்தது... முகில்..

ஒளிகுடித்துச் சிவந்திருந்த
அவளைப்போலவே
நானும் மாறியிருப்பேன்..
சாம ராத்திரிகள் கழிந்து...
தன்னழகை ஒத்திருந்த
பொறாமைக்குப் பிதற்றியிருந்தது
நிலா... முகிலிடம்...

கூந்தலள்ளி பின்னால்
பரப்பு.....மேகம் புகுந்த
என் ஒளியைப் போலவே
குளிர்ந்திருக்கட்டும்..
உன் கூந்தல் புகுந்த
விளக்கொளியும்...
மீண்டும் நிலா பிதற்றியது...
மேகம்தான் இப்பொழுது
பாறையின் மேல்...

சுற்றழகெல்லாம் இப்படியாக
அவளைச் சுற்றியழகை
மொய்த்திருக்க...

அரைவாசிச் சட்டையுரித்த
அரவு என...அவளின்
காத்திருப்புகள்
நீண்டு கொண்டிருக்கிறது...

பனிப்புகை கிழித்து
புரவியேறி ஆரோகிக்க
வரும் அவளின்
டிராகன் காந்தர்வனுக்காக...

எழுதியவர் : நல்லை.சரவணா (2-Jan-15, 8:29 pm)
Tanglish : sutram maranthu
பார்வை : 110

மேலே