அட்வைஸ் -அறிவுரை

அடிப்படை அறிந்தவன் நான்
வெளிப்படை தெரிந்தவன் நான்
நல்மொழி நான் உரைப்பேன்
என் வார்த்தை கேட்டல் வாழ்க்கை
உயர்வு பெறும் வானம் தொடும்
பெருமை வரும்
ஓ .போதுமையா உங்கள் பொல்லாத
அறிவுரைகள் தோற்றாலும் வென்றாலும் அறிவுரையா?
எங்களின் வாழ்வில்
நல்வழி போக கற்று தந்தீர்கள்
சுயமாய் சிந்திக்க கற்று தந்தீர்கள்
எமை செதுக்க கைகளில்
அறிவு எனும் உளி கொடுத்தீர்கள்
நன்றி
அனுபவம் கொஞ்சம்
படிக்கிறோமே
எங்கள் வாழ்க்கையில்
அடுத்தவர் கதை திரைக்கதை
எழுதுவதா ?
பனைமர தேகத்தை
அழகாக்கும் வரைகளை போல்
வாழ்க்கையின் பாதையில்
வண்ணமடிப்பது அனுபவமே
அறிவுரை சொல்லும் அசான்களே
அனுபவம் என்பது காலத்தின் தேவை
எம் எதிர் காலத்திற்கும் தேவை
இப்படிக்கு
புதிய தலைமுறை