நட்புணர்வு மிளிர் நன்மணி விருது 2014
காலத்தும் அழியாதது நட்புணர்வு
ஞாலத்தில் உயர்ந்தது நட்புணர்வு !
சாதிமத பேதமிலாதது நட்புணர்வு
சகோதரத்துவம் கொண்ட நட்புணர்வு !
அறிந்திட்ட மனங்கள் இன்பமுறும்
புரியாத நெஞ்சங்கள் அலைபாயும் !
மிளிரும் நட்புணர்வு நலம்பயக்கும்
ஒளிரும் நட்புணர்வு வழிகாட்டும் !
எதிர்பார்த்து எழுதவில்லை விருதிற்காக
எண்ணங்கள் எழுச்சியுறும் விருதுகளால் !
புத்துணர்வை அளித்திடுமே விருதுகளும்
புதுநட்புகள் பிறந்திடுமே விருதுகளால் !
விருதுகள் வகைவகையாய் தளத்தினில்
விருந்துகள் படைக்கின்றன நெஞ்சினில் !
அகமகிழ்ந்து அளிக்கின்றார் அகனாரும்
அயராமல் சிந்திக்கிறார் அல்லும்பகலும் !
நன்றிதனை நவில்கிறேன் அகனாருக்கும்
தன்னலமில்லா அகந்தான் அவருக்கும் !
வரிகளுக்காக எழுதவில்லை வார்த்தைகளை
வரியில்லா வருமானந்தானே விருதுகளும் !
எங்களுக்குள் நட்புணர்வும் என்றுமுண்டு
எதார்த்தமாய் அமைந்தது இத்தலைப்பும் !
எட்டுத்திக்கும் அறிந்திடுவர் இவ்விருதால்
எங்களுக்குள் நிலைத்திட்ட நட்புணர்வை !
" நட்புணர்வு மிளிர் நன்மணி விருது " பெற்ற
அன்பு நண்பர்கள் .....
சாந்தி சொக்கலிங்கம்
நாகூர் கவி
குமரிப்பையன்
ராம் வசந்த்
அவர்களின் சார்பாகவும் ,
என் சார்பாகவும்
நன்றியினை தெரிவிக்கவே இந்த கவிதை . .
எங்களை வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றி .. நன்றி
பழனி குமார்

