இப்படி நாம் காதலிப்போம்“பொங்கல் கவிதைப்போட்டி 2015”
இப்படி நாம் காதலிப்போம்!(“பொங்கல் கவிதைப்போட்டி 2015”)
அண்டை முட்டையில் ஆதிக்கம்
செலுத்தியவள் நான்!!!
அரை நிர்வாண ஆண்டிகளாக
ஆர்பரித்து வெளிவர, போரிட்ட நேரம்.
போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகம்.-
போட்டி என்றால் வெற்றியாளர் ஒருவர்தானே, அதுஎன்பக்கம்.
அண்டை முட்டையிடம் விடை பெற்று,
அவள் கருவறையில் கருபிண்டமாக கருவுற்றேன்.
என் வருகையில் இருந்த திண்டாட்டம்
அறிய அவளுக்கு ஒரே மகிழ்ச்சி கொண்டாட்டம்.!
ஐயிரண்டு மாதம் அவள்ஆள நான்
குழந்தை தெய்வமாக பிறப்பு எடுத்தேன்.
அழைக்க வார்த்தைகள் அறியேன்!
அதனால் அழுது அழைத்தேன்.
அள்ளி அணைத்துக் கொண்ட அவள்
ஆனந்தத்திற்கு, அளவு இல்லை அன்று!
அனாதையாக வந்த எனக்கு, அன்னை
என்ற பெயரில் அடைக்கலம் கொடுத்தவள்!
அவள் அன்புக் கோட்டை அரியணையில்
இன்று அரசி நான்.
ஐயிரண்டு மாதம் சுமந்த என் அன்னையை
என் ஆயுள் காலம் வரை சுமப்பேன்
அன்பு என்னும் ஆயுதம் கொண்டு...
இப்படி நாம் காதலிப்போம்!!!
-------------------------------------------------------------------------------------------------------------------
பெயர் : குமார். ப
வயது : 27
வதிவிடம் : தேனீஸ்வரன்பாளையம்
ஊத்துக்குளி அஞ்சல்
திருப்பூர்
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம் : 97502 68323
---------------------------------------------------------------------------------------------------------------------