இப்படி நாம் காதலிப்போம்

நீ எப்படி இருந்தாலும்
நான் காதலிப்பேன் உன்னை
முக நூலில் உன் முகம்
முத்திரையாய் முத்தமிட்டது என்னை.

உன் எழுத்துகளில் எழுந்தது
எனக்குள் ஓர் எண்ணம்
உன்னை எப்படி காதலிப்பது என்று
இப்படியாய் காதலிக்க எண்ணியது மனம்.

முக நூலில் உன் முகம் நான் கண்டு
என் முகத்தில் நீ மட்டும் ஒளியாய்
என் கண்களுக்கு குளிர்ச்சியாய்
கவர்ச்சியாய் நீ இருந்தாய்..

கண்ணே,மணியே, முத்தே
என்றெல்லாம் கவி பாட
வர வில்லை உன்னிடம்
காதலிக்கிறேன் உன்னை கண்டிப்பாய்.

காதலித்து விடு என்னை நீ
முக நூலில் முதுமை அடையும் வரை
இப்படி நாம் காதலிப்போம்
முகத்தோடு முகம் கண்டு.

முடிவாய் சொல்லி விடு
நான் முற்றுபுள்ளி வைப்பதும்
தொடர்புள்ளி வைப்பதும்
உன் முக நூலில் இருக்கிறது..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (3-Jan-15, 11:05 am)
பார்வை : 167

மேலே