நபிகள் பிறந்தனரே--------அஹமது அலி----

விண்ணுலகும் மண்ணுலகும்
போற்றும் நபியம்மா
அன்பிற்கும் பண்பிற்கும்
அர்த்தம் அவரம்மா....!!!!!!

அண்ணல் நபி நாயகம்
அன்பு நிறை தாயகம்
அவர் போல் இங்கு யார் கூறம்மா..!!!!

கண்ணின் மணியானவர்
கருணை நபியானவர்
கண்கள் தேடும் ஓர் உயிரானவர்

தீனின் விதையானவர்
தீமைக்கெதிரானவர்
தினம் கூறும் நல் பெயரானவர்...!!!

நெஞ்சின் ஒளியாக
உயிர் வாழும் நேசர்
விஞ்சும் புகழோடு
மறைந்திட்ட தூதர்

உதிரம் உறைந்தாலுமே
உலகம் அழிந்தாலுமே
அவர் புகழ் என்றும் நிலையாகுமே...!!!!!

உண்மை வடிவானவர்
உள்ளம் நிறைவானர்
உலகம் போற்றும் உயர்வானர்...!!!!

நன்மை வழி சொன்னவர்
நல்ல மறை தந்தவர்
நலம் வாழ பொன்மொழி சொன்னவர்..!!!!

ஏக இறைவனின்
இறுதித் தூதே
எங்கள் இதயத்தில்
மணக்கும் பூந்தாதே

சமதர்மம் தந்தீர்
சமத்துவம் கண்டீர்
சன்மார்க்கத்தை சங்கையாய் தந்தீர்...!!!

****************************************************************************************
பின் குறிப்பு: அகில உலகத்துக்கும் அருட்கொடையாக அனைத்து சமுதாய மக்களும் நபியாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபிகள் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்று!
அவர்கள் முஸ்லீம் மக்களும் மட்டுமான இறத்தூதர் அல்ல....அனைத்து சமுதாய மக்களுக்குமான இறைத்தூதர். இறுதியாக அனுப்பப் பட்ட தூதரும் இவரே!

இவர்களின் தூதுப் பணியில் ஏராளாமான சிறப்புகளை சொல்லலாம்

ஒரே இறைவனை வணங்கச் சொன்னது
மனிதரிடம் இருந்த ஏற்றத்தாழ்வை போக்கியது.
தீண்டாமையை அகற்றியது
விதவைகளுக்கு மறுவாழ்வு அளித்தது
பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது
ஏழை எளிய மக்களுக்கு கட்டாய தர்மம் வழங்கச் சொன்னது
பெண்களுக்கு சொத்துரிமையை நிலை நாட்டியது
மனிதநேயம் மிக்க பண்புகளை போதித்தது
பகைவரிடத்தும் அன்பு செலுத்தியது

முக்கியமாக இவருக்கு முன் வந்த இறைத்துதர்கள் அந்தந்த சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப்பட்டனர்
அனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.

இவருக்கு முன் வந்த இறைத்தூதர்களை அவர்களின் சமுதாயத்தினர் கடவுளாக ஆக்கிக் கொண்டனர்.
அதை போல் தம்மையும் ஆக்கிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.
தான் ஒரு தூதர் மட்டுமே
தான் கடவுள் இல்லை என்பதை தெளிவாக உணர்த்திச் சென்றுள்ளார்கள்!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

அவர்கள் பிறந்த இந்நாளில் இவ்வாழ்த்துப்பாவை பாடியதில் மகிழ்கிறேன்

உங்களுடன் என் மகிழ்வை பகிர்கிறேன்!

எழுதியவர் : அஹமது அலி (3-Jan-15, 8:11 am)
பார்வை : 3735

மேலே