அவசர முத்தக்களவாடி

அவசர முத்தக்களவாடி
=====================

நாளிற்கு நான்கைந்து முறை இழுக்கிறேனாம் ,
ஆதலினால்தான் ம்ம்ம்,,
மாட்டேன் மாமா என்கிறாள்
எங்கே சத்தியம் செய்து சொல்லேன்,,
இதுவரையிலும்,,
நான் உன் முந்தானைமுனை மணியிடுக்கில்
மாட்டவில்லையா என்ன ம்ம்ம்,,
என்ன செய்ய ,, ம்ம்ம்
ஒவ்வொரு அணுகுமுறையின் போதும்
புதுமை பெறுகிறாயே,,
ஏதேது போகப்போக உன் பின்னாலலைந்து
என் உள்நாக்குமல்லவா
நாய்ப்போல் நீண்டுதொங்கிவிடும்போல் இருக்கிறதே ,,,

மனசாட்சியே இல்லையா என்கிறாள்
மனசை ஆண்டுவிட்டு ம்ம்ம்,,
என் எலும்பில்லா பாகத்தின் தேடலின் சூது,,
உன் சூது கவ்வும் தெரியுமா ம்ம்,,
ஆமாம் யாரும் காணாத இடத்தில் மட்டுமே
அது கவ்வும் காயமும் செய்யும் ம்ம்ம்ம்

வாசிப்பாரற்று
கரையோரம் காற்றுமீட்டி அழும்
அழகிய தனியொரு வயலின் போலே
நகம் கடிக்கும் ஒலியெழுப்பி
திருட்டுப்பய மகன்
நீயே வந்து மாட்டிட்டு,, பழி எனக்கா
என வாய்முறுக்கி
வாசற்படிக்கட்டில் நிற்கிறாள்
வேலைக்கு,, புறப்படும்போதெல்லாம் ம்ம்ம்,,

என்ன வலை தயார் செய்தாளோ தெரியவில்லை ,
என்னை கொள்ளைக்கொள்ள
எது எப்படியோ,, என்னைப்பொறுத்தமட்டும்
நீயும் நானும்
இடியாப்ப சிக்கல்தான் இறுதிவரை ,,,

ஆபீஸ் போனதும் கால்(call) போடுவியா மாமா,,
என்றவளைக்கண்டு
கள்ளத்தனமாய்,, விழிகள் முறுவலிக்க ,,
கேலியாகச்சொன்னேன்
கால் என்ன (உன் தோள்மேல்)
கையும் போடுவேனே என்றவனைப்பார்த்து
ச்சீ இந்த மனிஷனுக்கு,,
இங்கீதமே இல்லை கொஞ்சங்கூட என்கிறாள்

சரி சரி கோபிக்காதேடீ கண்ணம்மா
ஒரு அஞ்சு நிமிஷம் குடேன்
சட்டென்று தோன்றிய
சம்பவக் கவிதையொன்றை
இதோ அழகுப்படுத்திவிடுகிறேனே என்றதும்,,,,
இரு இரு என் அடிமை நீ
போ இந்த பிரபஞ்சமே பஞ்சம்தான் நமக்கு
நேசித்துத் தீர்க்க ம்ம்ம்
குறைந்தது ஆகாசமேனும்
மடக்கிக் கொண்டுவா
மூடிய நம் இமைகள் பிரசவிக்கும்
குட்டிப் பிறைகளுக்கு
அந்த வெண்மேகப் பஞ்சினால் நூற்கட்டு நெய்து
நிலவாடைத் தைக்கலாமே மாமா
என்றவளின் குறும்புத்தனங்களினால்
நேரம் போனதே தெரியவில்லை
தினந்தோறும் அவள்
உரைப்பெயர் வைத்துக் கூப்பிடுமிந்த
"அவசர முத்தக்களவாடி" க்கு ம்ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (3-Jan-15, 3:50 am)
பார்வை : 111

மேலே