ஆப்கன் போருக்குப் பின் பெண்களின் நிலை

டில்லி நிருபர் ஒருவர் முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி , அங்கு சென்று வந்த ,உடன் பணியாற்றும் பத்திரிக்கையாளரின் ,
அனுபவங்களை விவரிக்கிறார்.

இப்போது பாகிஸ்தானில் அகதியாக வசிக்கும்,ஆப்கன் பெண்மணியின் அனுபவம் கொடுமையானது. அப்பெண் சொன்னது இது ........

தாலிபான்களின் ஆட்சியின் போது, சரியாக உடை அணியவில்லை என்பதற்காக,20 சவுக்கடி எனக்கு கொடுக்கப்பட்டது.
அதன் தழும்புகள் என் முதுகில் இப்போதும் இருக்கின்றன.

சவுக்கடி தழும்புகள் இல்லாத பெண்ணை நீங்கள் ஆப்கனில் பார்க்க முடியாது .தாலிபான் சொல்லி இருந்த படி தான் புர்கா அணிந்து இருந்தேன்.ஆனால் என் மணிக்கட்டு தெரிந்து விட்டது என்பதற்காக சாலையில் என்னை நிறுத்தி சவுக்கால் அடித்தனர் . அதோடு என்னை விடவில்லை அதற்கு மேல் நடந்ததை உங்களுக்கு சொல்ல இயலாது .


இப்படி சொன்ன பெண்ணின் வயது 40..................


ஆப்கனில் பெண்களின் கல்வி அறிவு வெறும் 4% மட்டுமே ! பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தாலிபான் தடை செய்து விட்டது .உடல்நிலை சரி இல்லாத பெண்கள் ,ஆண் மருத்துவர்களிடம் செல்வதும் தடை செய்து விட்டது .பெண் மருத்துவர்களோ ப்ராக்டிஸ் செய்ய தடை ,இந்நிலையில் பெண்களின் கதி என்ன ஜுரம் வந்தால் கூட ,கவனிக்க யாரும் இன்றி ஜன்னி கண்டு இறந்தனர் பெண்கள். கர்ப்பிணிகளின் நிலையோ சொல்லவே தேவை இல்லை .

நோய் வந்த பெண்ணுக்கு ,ஆப்கனில் உயிர் வாழ எந்த வாய்ப்பும் இல்லை .நோய் முற்றி இறக்க வேண்டியது தான்.

பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்வதற்கும் தடை,அதனால் விதவைப் பெண்கள் வேலை எதுவும் செய்ய முடியாமல் பட்டினியால் இறந்தனர் .இதனால் ஆப்கன் பெண்கள் நிறைய பேர் பிச்சை எடுப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம் (நல்ல வேளை பிச்சை எடுப்பது தடை செய்யப் படவில்லை ).

பிச்சை எடுத்து கொண்டு இருந்த பெண்கள் பலர்,போருக்கு முன் ஆசிரியர்களாகவும் ,நர்சுகளாகவும் இருந்தவர்கள், பெண்களுக்கான பள்ளிகளும் ,மருத்துவமனைகளும் மூடப் பட்டு விட்டதால் அங்கு பணியாற்றிய பெண்கள் ,பிச்சைகரிகல அலைய வேண்டிய நிலை ஏற்பட்தது .


இது மட்டுமல்ல ,பெண் சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது,வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டும்.வெளியே வந்தால் அவளுடன் சகோதரனோ , கணவனோ, தகப்பனோ உடன் வர வேண்டும்.ஆனால் அனேகமாக அவர்கள் போர்களத்தில் கொள்ளப்பட்டு இருப்பர்.வெளியே சம்பந்தமில்லாமல் சுற்றித் திரியக் கூடாது,நடக்கும் போது செருப்பு சத்தம் கேட்கக் கூடாது .


இதில் ,எத்ஹவது ஒன்று நடந்தால் கூட , தெருவில் நிற்க வைத்து பிரம்படி கொடுப்பார் ,பிரம்பு என்றால் மெல்லிய பிரம்பு அல்ல கிரிக்கெட் பேட் அளவுக்குத் செய்த தோல் பிரம்பு .

மேற்ச்சொன்ன காரணக்களால் ஆப்கனில் உள்ள பெண்கள் 99% மன நோயாளிகளவும் பலர் தற்கொலையும் செய்து கொண்டனர் .

ஆனால் போருக்கு முன் பெண்களின் நிலை எப்படி இருந்தது தெரியுமா..

ஆசிரியர் வேலையில் 70% ,மருத்துவர் 40%,அரசு வேலை 50% ,பெண்கள் இருந்தனர் .பெண்கள் அப்போது பாராளுமன்றத்தினிலும் ,ரானுவத்தினிலும் கூட இருந்தனர்.

பெண்கள் மீது தாலிபான் போட்டுள்ள உத்தரவைப் பாருங்கள் ...................


அவர்கள் அணியும் புர்கா சாக்கு போன்று கனமாக இருக்க வேண்டும் .இதை உடம்பு முழுவதும் கை மணிக்கட்டு கூட தெரியாமல் போட்டுக் கொண்டு பாலைவன வெயிலில் நடப்பதை கற்பனை செய்து பாருங்கள் .

சாலையின் ஓரத்தில் தான் நடக்க வேண்டும் ,சிரிக்கவோ ,வளையல் அணியவோ ,திரவியம் பூசவோ ,கூடாது ;இடுப்பை அனாவசியமாக ஆட்டி நடக்கக் கூடாது .வீட்டுக்கு வெளியே யாரிடமும் பேசகூடாது ...............

.------------------------------------------------- இவை அகதிப் பெண் கூறியது ............

இப்பொழுது இவை பெரும்பாலும் ஒழிந்து விட்டது என்று எண்ணி நாம் பெருமூச்சு விடலாம்...........


இது நான் வாரமலரில் படித்தது .........

*****************************************************************************

ஒரு பெண் ஆண் வாழ்வில் முக்கியப் பங்களிக்கிறாள் தாயாக , மகளாக ,மனைவியாக ,உங்களில் சரி பதியாக எற்றுக் கொள்ள விட்டாலும் அவளின் சாதாரண உரிமைகளை கூட தராமலிருப்பது கொடுமையானது ............... பெண்களைச் சதை பிண்டமாகப் பார்க்கச் சொல்லி எந்த மார்க்கமும் போதிக்கவில்லை.கடவுளின் பெயரால் வதை செய்பவன் நிச்சயம் அந்த கடவுளைச் சென்று அடைய மாட்டான்...........

என்னதான் பெண் சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டு இருந்தாலும் உலகத்தின் எங்கவாது ஒரு மூலையில் அவள் அடிமையாகத் தான் வாழ்கிறாள்.........................என்பது வேதனைக்குரியது ...............

எழுதியவர் : kannama (3-Jan-15, 11:35 pm)
பார்வை : 135

மேலே