ஒரு தலை காதல்
(இன்றைய கல்லூரி மாணவர்களின் நிலை )
கண்ணே !
மணியே !
என
காதலித்தாய்
கனினியை!
எலியை
வாகனமாய்
ஏற்றாய் !
உலகம்
சுற்றும்
வாலிபனனாய் !
தேடல்களை
தொடர்ந்து
அயர்ந்து
தொலைந்தாய் !
காதல்
பரிசாய்
லேப்டாப்!!..
காதலியை
அரவணைக்க
கருப்பு ஒயர்கள்
உடலை சுற்றி !
பறந்தாய்
மிதந்தாய்
கனவுலகில் !
மறந்தாய்
துறந்தாய்
சுற்றுபுறத்தை !
ஒரு தலை காதல்
ஏனோ ?
காதல் பார்வையால்
கனினியை
காதலித்து காதலித்து
கதிர் வீச்சு ஒளியால்
கண் பார்வையை
கண்காணா தூரத்தில்
தொலைத்து கொண்டு இருக்கின்றாய் !
ஒரு தலை
காதலை
ஒதுக்கி
இயற்கையை
காதலித்து
இயல்பாய்
இனிமையாய்
கல்வி பருவத்தை
கடக்கும் போது
காதல் முழுமை அடையும் !