கதம்பக் குறும் பா

ஆசைக்கு
இணங்க மறுக்கிறது?!.....மனம்
தினம்!!...
தினம்!!....

வசதி அசதியானால்
அசதி வசதியாகும்!!.....

அழுத்தம் திருத்தமாய்
பொறுத்துப் பாருங்கள்!!....
வருத்தத்திர்க்கான திருத்தம்
தீர்க்கமாய் தெரியும்!!.....

ஜாதி சான்றிதழ் கேட்கிறது
பள்ளி நிர்வாகம்
"ஜாதின்னா என்னப்பா"?!....
முதல் கேள்வி கேட்டால்
என் முதல் வகுப்பு மகள்!!......

விடுமுறை கேட்கிறது மனம்
மனமில்லா இதயம் தான்
சற்று யோசிக்கிறது?!.....

சாக்கடைக்கு யார் கொடுத்தார்கள்?!....
மழைநீரை
இலவசமாய்!!.......

கல்லுக்கு வணக்கம் போடுகிற நாம்
தமிழ் சொல்லுக்கு
ஏன்?!......
வணக்கம் போடுவதில்லை?!.......

தலைக்கும்
பிழைக்கும்
முழுக்கு போடுங்கள்?!......
இழை போடும் சுத்தம்!!.....
சத்தமில்லாமல் நித்தம்!!.....

எழுதியவர் : வைகை அழகரசு (4-Jan-15, 1:11 pm)
பார்வை : 100

மேலே