கதம்பக் குறும் பா

பென்னிகுக்கின்
ஆனந்த கண்ணீர்
ஆர்ப்பரிக்கிறது
முல்லைப் பெரியாராய்!!...............

செவ்வாய் தோசமல்ல....
நாளைய இளைய தலைமுறையின்
நம்பிக்கை தேசம்!!......

சோம்பேறி இதயம்
கடிகாரத்திடம்
எதை தேடுகிறதோ?!......

எமதர்மன்
யாரை தேடுகிறானோ
தெரியவில்லை?!......
மரணம்
அவனை தேடிக்கொண்டிருக்கிறது!!...............

மறைவிடம் தேடுகிறது
"காமக் காதல்"
மயானம் தேடுகிறது
"கோழைக் காதல்"
கையைப் பிசைந்து கொண்டு
அடுத்த முறை ஆனந்த கண்ணீருக்காய்
"ஏழைக் காதல்"

விருப்பப்பட்டு
விருந்தானவர்கள்
வருத்தப்பட்டு
என்ன பயன்!!.....

எழுதியவர் : வைகை அழகரசு (4-Jan-15, 12:52 pm)
Tanglish : kadhampa kurum baa
பார்வை : 76

மேலே