காதல் வலி..........................எனக்கு பாடை கட்டுங்கள்.................................
எனக்கு பாடை கட்டுங்கள்
அவளுடைய பாவாடை
நாடாவையும்
சேர்த்துக்கட்டுங்கள்
அவளுக்கோ மாலை போட
முடியாத பாவிநான்
நான் இறந்த பின்
என் பாடையிலே என் மீது
மாலை போடுங்கள்
என்னை ஏமாற்றி
என் காதலுக்கு பூ வைத்து விட்டால்
என் பாடை ஊர்வலம்
போகும் பாதை எங்கும்
அதற்க்கு அடையாளமாக
பூக்களை தூவுங்கள்
என் பாடை ஊர்வலத்தில்
மௌன அஞ்சலி செலுத்துங்கள்
என் காதல் சக்தி இழந்து
மௌனமாய் போனதற்கு
எனக்காக
கண்ணீர் விட்டு அழுங்கள்
என் கண்ணீர் தொடாத
அவள் இதயத்தை
உங்கள் கண்ணீராவது
போய் தொடட்டும்
என்னை எரித்து விடுங்கள்
அவளை காதலித்து ஏமாந்ததக்கு
என் உடல் எரிந்து
நாச மடையட்டும்
என்னை போல்
தோல்வியுற்று கலங்கும்
கண்ணீர் துளிகளில் என் சாம்பலை
கரைத்து விடுங்கள்
என் தோல்வியும்
என் மரணமும் என்னோடே
போகட்டும்................................